நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்..! ராகுல் காந்தி விமர்சனம்..!
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்
கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு அதாவது அம்பானி, அதானிக்கு பலன் தரும் விதமாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். முன்னதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..