கிருஷ்ணகிரியில் களை கட்டிய எருது விடும் போட்டி

கிருஷ்ணகிரி அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற எருது விடும் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

கிருஷ்ணகிரி அருகே திப்பனபள்ளி கிராமத்தில் தமிழர்களின் வீர விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் எருது விடும் போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட எருதுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.

அவிழ்த்து விடப்பட்ட எருதுகள் ஒவ்வொன்றும் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன, இதனை கண்ட பார்வையாளர்கள் காளைகள் வேகமாக ஓடுவதற்காக ஆரவாரம் செய்தனர். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளையின் உரிமையாளருக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

What do you think?

சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது