ஆர்சிபியின் கூல் லோகோ – பும்ரா கிண்டல்

ஆர்சிபியின் புதிய லோகோவை கூல் லோகோ என்றும், தன்னுடைய பந்துவீச்சின் ஆக்‌ஷன் போலவே உள்ளது எனவும் பும்ரா கிண்டலடித்துள்ளது இணையத்தில் வைராலாகி வருகிறது.

ஆர்சிபி எனப்படும் ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல்லில் மிக முக்கிய அணியாக கருதப்படுகிறது. கோலி தலைமையில் பல முன்னணி வீரர்கள் ஆடி வந்தாலும், இதுவரை அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால், ஆர்சிபி அணி ரசிகர்கள் கூட சில சமயங்களில் கிண்டல் செய்வதுண்டு. மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில் ஆர்சிபி அணி தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், அணியில் புதிய உத்வேகத்தை கொண்டு வருவதற்காக ஆர்சிபி அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அணியின் லோகோவில் சிங்கத்தின் படம் இடம்பெற்றுள்ளது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா புதிய லோகோ குறித்து, ‘நல்லது ஆனால் கோப்பையை கைப்பற்றுங்கள்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆர்சிபியின் புதிய லோகோவை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிண்டலடித்துள்ளார். ‘கூல் லோகோ, இது என்னுடைய பந்துவீச்சின் ஆக்‌ஷன் போலவே இந்த லோகோ உள்ளது’ என கருத்து தெரிவித்துள்ளார். பும்ராவின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பல ரசிகர்கள் பும்ராவின் கருத்தை வரவேற்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்

கோவிட்-19 : பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு