CAA, NRC, NPR-க்கு எதிராக கோவையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை கொடிசியா திடலில் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் CAA, NRC, NPR-க்கு எதிராக “வாழ்வுரிமை மாநாடு” நடைப்பெற்றது.

இந்த மாநாட்டை முன்னிட்டு அந்த கொடிசியா திடலுக்கு காந்திஜி பெயரும், மாநாட்டு மேடைக்கு டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தில் கடும் குளிரில் உயிரிழந்த குழந்தை ஜஹானாராவின் பெயரும் வைக்கப்பட்டது. இதே போல் இந்திய இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நீதியரசர் சச்சார் அவர்களின் பெயர் மாநாட்டின் முக்கிய நுழைவாயிலுக்கும், பெண்கள் நுழைவாயிலுக்கு, காஷ்மீரில் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபாவின் பெயரும் வைக்கப்பட்டது.

இந்து, இஸ்லாம் , கிறிஸ்த்துவ, சீக்கிய குழந்தைகள் சிரிக்கும் படங்களுடன் “இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்” என்ற 80 அடி நீள பேனர் மேடையின் முன்பகுதியில் தொங்க விடப்பட்டது. அது காண்போரை பரவசப்படுத்தியது.

மாநாடு நடைபெற்ற திடலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களில், பூலித்தேவர், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, காந்தி, அம்பேத்கார், பசும்பொன் தேவர், காமராஜர், காயிதே மில்லத் போன்றோரின் படங்கள் வரையப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்த அனைத்து மக்களும் எழுந்து தங்களது செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு டெல்லியில் கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்தனர்.

மாநாட்டில் பேசிய தமீமுன் அன்சாரி, “தமிழகத்தில் முதன் முறையாக டிசம்பர் 12 அன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக தான் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நகல் கிழிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தது. அதன் பிறகு பேரணிகள், ஆர்ப்பாட்டம் மண்டல, மாவட்ட கூட்டங்கள் என பலரும் இதை வலிமைப்படுத்தினர். ஆனால் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக முதல் முதலாக மாநாடு நடத்தி அரிய கள சாதனையை உற்சாகமாக செய்து மஜக முடித்திருக்கிறது”என்று தெரிவித்தார்.

What do you think?

‘6வது நாளாக தொடரும் கேன் உரிமையாளர்களின் போராட்டம்’ சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு?

‘பெங்களூரை சேர்ந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ்’ தெலுங்கானாவில் கண்டுபிடிப்பு!