சிஏஏ போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்

சிஏஏ விவகாரத்தில் அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சிஏஏவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், திருப்பூரில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், சிஏஏ விவகாரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

What do you think?

‘மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு, ஒரு விஷயத்தில் ஏமாற்றம் தான்’ ரஜினிகாந்த்

‘டெல்லி கலவரத்தை மறைக்கவே கொரோனா வைரஸ் பீதி’ மம்தா அதிரடி!