தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இதில் புதிய தொழிற்நுட்பங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளபட்டுள்ளது.
இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் முக் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செல்பாடுகளையும் அதில் புதிய தொழிற்நுட்பங்களையும் மேற்கொள்வது குறித்து ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கேபிள் டிவி சேவையின் கட்டணத்தை குறைத்து வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV உள்ளிட்ட தொழில்நுட்பங்களை வழங்க கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை வழங்க இருப்பதாகவும். மேலும், அரசு கேபிள் நிறுவனத்தில் TACV OTT செயலிகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.