கருத்தடை மாத்திரை புற்றுநோய் உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்.
புரோஜெஸ்டோஜென் கருத்தடை மாத்திரைகள் 30% அளவிற்கு மார்பக புற்றுநோயை வரவழைக்கும் என்று இதற்கு முன் செய்த கேன்சர் எபிடெமியாலஜி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து மருத்துவர் அபினையா விடம் பேசிய போது.
கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகள், இனப்பெருக்கம் அதிகமாவதை தடுக்கும். கர்பப்பையில் கரு உற்பத்தி ஆக விடாது. ஆனால் இந்த ஹார்மோன்கள் வித்தியாசமானவை. உடலில் உள்ள திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்.
இந்த ஹார்மோன்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். மேலும், கர்ப்பப்பையில் இனப்பெருக்க உற்பத்தி ஆகவிடாமல் தடுக்கிறது.
மார்பக திசுக்களை பொறுத்தவரை இந்த ஹார்மோன்கள் எதிர்மாராக செயல் ஆற்றும், இந்த ஹார்மோன் மாத்திரைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும். 20-35mg டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை பயன் படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரை படி. மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் ‘அபினையா’ கூறினார்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடருந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி