இதய நோயாளிகள் இரத்ததானம் செய்யலாமா..?
இதய நோய் என்பது இதயத்தில் இரத்த குழாய்களின் அடைப்பு ஆகும். ஒருவர் ஆஞ்ஜைனா எனப்படும் நெஞ்சுவலி இல்லாமல் ஆறு மாதம் உறுதியாக இருப்பாரா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருப்பாரென்றால் அவர்களுக்கு இரத்த தானம் கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.
இதய நோயாளி மாத்திரை எடுப்பவராக இருந்தால், இரத்த உறைதலுக்கான மாத்திரைகளாக இல்லாத பட்சத்தில் அவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
மேலும் இதயநோயாளிகள் கடந்த ஆறு மாதமாக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைத்திருந்தால், ஆறு மாதம் கழிந்தபின் இரத்த தானம் செய்யலாம்.
நிரிழிவு நோயாளிக்கும் இது பொருந்தும், அவர்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், திடீரென ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதயநோய், நிரிழிவுநோய் உடையவர்கள் இரத்ததானம் செய்யலாமா என்பதுடன் இரத்த அழுத்த நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா என்ற கேள்விக்கு, இரத்த அழுத்தம் மிக குறைவாகவும், இரத்த அழுத்தம் மிக அதிகமாகவும் இருந்தால் அவர்களும் இரத்ததானம் அளிக்க கூடாது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..