விண்வெளியில் ஆக்சிஜன் பயன் படுத்தமுடியுமா..? தெரிவோம் அறிவோம்- 13
விண்வெளி செல்லும் வீரர்கள், விண்வெளியில் மூச்சுவிடும் பொழுது ஆக்சிஜனை எடுத்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுவார்கள். விண்கலத்தில் இருக்கும் ஒரு சிறப்பு கருவி செயல்படும்.
அந்த கருவியின் செயலானது கார்பன்டை – ஆக்ஸைடை உறிஞ்சி வேதிவினை செய்து உடைத்து மீண்டும் ஆக்சிஜனை தனி தனியே பிரித்து எடுப்பார்கள். அவ்வாறு பிரித்து எடுக்கும் ஆக்சிஜனை மீண்டும் விண்கலத்தில் செலுத்துவார்கள்.
ஆபத்தான சமையத்தில் உதவும் என வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தாலும். விண்வெளி செல்லும் வீரர்கள் செயற்கை சுழற்சி முறையில் தங்களுக்கு வேண்டிய காற்றை தயார் செய்துக் கொள்கிறார்கள்.
மூன்று நிலையான ஐசோடோப்புகளின் கலவையை தான் இயற்கை ஆக்சிஜன் என்று அழைக்கிறோம். ஆக்சிஜன் -16 (99.759 சதவிகிதம் ) ஆக்ஸிஜன் -17 (0.037 சதவிகிதம் ), ஆக்ஸிஜன் -18 (0.204 சதவிகிதம் ) பல செயற்கையாக தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன.
வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை தனிமை படுத்தவோ அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைடு தயாரிக்கவோ வணிக செயல் முறையானது. ஆன்டி ஆக்சைடில் இருந்து பேரியம் பெராக்சைடு உருவாக வழிவகுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..