கர்ப்பிணி பெண்கள் பலாப்பழம் சாப்பிடலாமா..?
கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் சந்தேகம்.., கர்ப்ப காலத்தில் பலாப்பழம் எடுத்துக்கொள்ளலாமா என்பது தான்..?
கர்ப்ப காலத்தில் மிதமான பலாப்பழம் எடுத்துக்கொள்வது சிறந்தது. மிதமான அளவு பலாப்பழம் எடுத்துக்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் சி சக்தி அதிகம் இருப்பதால் நோய் தொற்று அபாயத்தில் இருந்து குறைக்க உதவுகிறது.
இதுக் குழந்தை வளர்ச்சியை மிகவும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ஆனால் பலாப்பழம் வெப்பத்தன்மை கொண்டு இருப்பதால்.., அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. ஆசைக்கென்று ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொள்ளலாம்.
7 மாததிற்கு மேல் ஆனா கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். 7 மாதத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது. அல்லது மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, பலாப்பழம் சாப்பிடலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.