கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாமா..? எடுத்துக் கொள்ளக்கூடாதா..?
கர்ப்பகாலத்தில் பெண்கள் பலருக்கும் ஏற்படும் சந்தேகம், எந்த வகையான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ள கூடாது என்பது பற்றி தான்.
அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது கர்ப்பகாலத்தில் பேரிச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாமா..? அப்படி எடுத்துக்கொள்வது நல்லதா..? ஆபத்தா என்பது பற்றி தான்.
* கர்ப்பகாலத்தில் பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்வது தாய்க்கு மட்டுமல்ல சேய்க்கும் ஆரோக்கியமானது.
* பேரீச்சம்பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
* மலமிளக்கியாக கருப்பை சுருக்கத்திற்கு உதவுகிறது.
* இதனால் சுக பிரசவம் ஆவதற்கும் வழி வகுக்கிறது.
* கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களில் பேரீச்சம்பழம் எடுத்துக் கொண்டால். பிரசவவலி முன்னரே வருவதற்கு உதவி செய்யும்.
* இதில் இருக்கும் நார்ச்சத்து கர்ப்பகாலத்தில் செரிமானம் ஆவதற்கு உதவும்.
* மலசிக்கல் ஏற்படாமலும் தடுக்கும்.
* உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்களை வழங்குகிறது.
* தினமும் நான்கு பேரீச்சம்பழம் எடுத்துக்கொண்டால் முதுகு தண்டு குறைபாடுகள் நீக்கி விடும்.
* பேரீச்சம்பழத்தில் இருக்கும் ஃபோலேட்டின் மூளைக்கு ஆற்றல் கொடுப்பதோடு. என்றும் சிந்தனையோடு செயல்பட உதவுகிறது.
* பேரீச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே இரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
* பேரீச்சம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
எனவே கர்ப்பகாலத்தில் கட்டாயம் பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..