அண்ணன் தங்கையின் பாசம் ஒரு சிப்பிக்கு ஈடாகுமா..? குட்டி ஸ்டோரி-26
ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்துக்கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.., ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கிய படி நின்றால் அவன் தங்கை.
தங்கையை பார்த்த அண்ணன்.., என்ன பொம்மை வேண்டுமென கேட்டான்.. அதற்கு அந்த குட்டி தங்கை பிடித்த பொம்மையை பார்த்து கையை நீட்ட, அண்ணனும் அதை எடுத்து தங்கை கொடுக்கிறான்.
பின் அங்கிருக்கும் கடையின் முதலாளியிடம் சென்று இந்த பொம்மை என்ன விலை என கேட்க.., அதற்கு அந்த கடை முதலாளியும் உன்னிடம் எவ்வளவு தம்பி இருக்கிறது என கேட்டுள்ளார்.
உடனே அந்த சிறுவன் அவன் பாக்கெட்டில் இருந்த அனைத்து சிற்பிகளையும் எடுத்து.., கடைகாரரிடம் கொடுத்தான்.., சிரித்தபடி அந்த கடைகாரர்.., தம்பி எனக்கு நான்கு சிற்பிகள் போதும் மற்றதை நீயே வைத்துக்கொள் என கொடுத்து பொம்மையையும் கொடுத்து விட..,
சந்தோஷத்தில் அங்கிருந்த சிறுவர்கள் சென்றனர்.., பின் அங்கிருந்த வேலைக்காரர் ஒருவர் ஓடிவந்து ஐயா காசு வாங்காமல் ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் இந்த சிப்பியை வாங்கிகொண்டு ஏன் விலை உயர்ந்த பொம்மையை கொடுத்தி விட்டீர்கள் என கேட்க.
அதற்கு அந்த முதலாளி.., பணத்தை விட அவன் சிப்பி விலை உயர்ந்தது, பணம் கொடுத்தால் பொருள் கிடைக்கும் என நாம் சொல்லிவிட்டால் அதுவே நாம் ஆள் மனதில் பதிந்துவிடும். அதுமட்டுமா தங்கை கேட்டதை தர முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு வராது என சொன்னார்.
இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது பணத்தை விட பாசம் பெரியது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..