கார்ப்ப காலத்தில் தைராய்டு மாத்திரை பயன் படுத்தலாம்..?
திருமணத்திற்கு முன்பு சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும். அதற்காக சில மாத்திரைகளை எடுத்து கொள்வார்கள். ஆனால் கர்பம் ஆனா பின், இந்த மாத்திரைகளை பயன் படுத்தலாமா..? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உங்களின் கேள்விக்கு பதில் இதோ..!
கர்ப்பகாலத்தில் சில மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது, என்று சொல்லுவார்கள். காரணம் நாம் பயன் படுத்தும் மாத்திரைகள், கருவில் உள்ள சிசு விற்கும் செல்லும் என்பதால் தான்.
ஆனால் தைராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தி விடக் கூடாது, கருவில் உள்ள குழந்தைக்கு தைராய்டு சுரப்பி முதல் மூன்று மாதத்தில் வளர்ச்சி பெற்றிருக்காது.
எனவே குழந்தைகள் தாயின் தைராய்டு சார்ந்தே இருப்பார்கள். எனவே அந்த சமயத்தில் குழந்தைக்கும் செல்லும் தைராய்டு அளவு குறைவாகவே செல்லும்.
தைராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டால், குழந்தை பிறந்த பின் வளர்ச்சி குறைவாக காணப்படும். ஒரு சிலருக்கு கரு கலையவும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
மேலும் இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்தது. என மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ தேவி அறிவுறுத்தினார்.
மேலும் இதுபோன்ற பல மருத்துவக்குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி