தியானத்தில் இப்படி செய்யலாமா..? மோடியின் தியான போஸ்ட்..! வைரலாகும் போட்டோஸ்..!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் சோதனைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக நேற்று பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அப்போது பகவதி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பகவதி அம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி காவி உடை அணிந்து கொண்டு. கையில் ருத்திராட்சை மாலையுடன் சூரிய உதயமாகும் திசையை நோக்கி, கமண்டலத்தில் இருந்து நீர்வார்த்தார்.
குமரி முனையில் சூரிய உதயத்தை தரிசித்து விட்டு அதன் பிறகு மீண்டும் தியானம் செய்து வருகிறார். இன்று இரண்டாவது நாளாக மோடி தொடர்ந்து தியானம் செய்து வருகிறார். தியானத்தின் போது இடை இடையே அவருக்கு இளநீர், ஜூஸ், மற்றும் பழங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நெற்றியில் விபூதி பட்டை – குங்குமம் அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி கைகூப்பி வணங்கியவாறு பிரதமர் மோடி சம்மனம் இட்டு அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..