இந்த மழைக்கு சூடா ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா..?
மழைக்காலம் வந்து விட்டாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு விஷயம் சூடாக சமைத்து சாப்பிடுவது.. அதிலும் மழையை ரசித்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் இருக்கே இன்னும் சூப்பர் என சொல்லலாம்..
அப்படி மழைக்காலத்தில் பலரும் விரும்பும் டீ கடை ஸ்டைலில் பஜ்ஜி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…
என்னதான் நம் வீடுகளில் டீ போட்டு குடித்தாலும் பலருக்கும் டீக்கடையில் நின்று டீ குடிப்பது ஒரு வழக்கமாக இருக்க தான் செய்கிறது. மாலை நேரத்தில் அவ்வாறு டீ குடிக்கையில் அங்கு வைத்திருக்கும் பஜ்ஜி, போண்டாக்களை வாங்கி சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது.
அப்படி பலருக்கும் விருப்பமான இந்த டீக்கடை பற்றி நாம் வீட்டில் செய்யப்படும் முறையை விட சற்று மாறுபட்ட விதத்தில் செய்யப்படுகிறது.. அது எப்படி செய்வது என்றும் சுவையான டீக்கடை ஸ்டைல் பஜியை வீட்டிலேயே செய்து சாப்பிடவும் இப்பதிவு உங்களுக்கு உதவும்
இதற்கு தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வாழைக்காய்- 2
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1, 1/2 டீஸ்பூன்
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள வாழை காயை நன்கு சுத்தப்படுத்தி எடுத்து தோல் சீவி கொள்ளவும்… பின்னர் அதன் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் கட்டி அகற்றி விட்டு பஜ்ஜி போடுவதற்கு வசதியாக அதனை சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
அதன்பின் அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் நாம் சீவி வைத்துள்ள வாழை காய்களை முக்கிய எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பஜ்ஜி தயார்..
இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு கருத்துக்களை பதிவு பண்ணுங்க..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..