அதானியுடனான ஒப்பந்தங்கள் ரத்து…!! அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி..!!
அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 21 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்ததாக, அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டுள்ளதாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த “வால் ஸ்ட்ரீட்” அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க உறுதி செய்துள்ளது.
முதலீடுகளை பெற்று முறைகேட்டில் ஈடுட்டதற்காக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் கவுதம் அதானி உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் மீது நேற்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை என்பதால் இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை பல்வேறு சந்தர்பங்களில் அதானியே நேரில் சந்தித்தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து செய்தித்தொடர்பாளர் அதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். வெளிப்படைத் தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் இவ்வாறே அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில், உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..