சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக ஏற்றுகொள்ள முடியாதா..? கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமானம் செய்யக்கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு கொண்டு வருகிறது, தமிழகஅரசு சார்பாக, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் திமுக சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதனால் பல சட்ட மசோதாக்கள் அமலுக்கு வராமல் இருப்பதாக திமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் பதவியில் இருக்கின்றனர். 14 பேர் இருந்த உறுப்பினர் பதவியில் தற்போது 4பேர் மட்டும் இருப்பதாகவும் மற்ற பொறுப்புகள் காலியாக இருப்பதால் அந்த இடத்திற்கு தலைவர்களை நியமானம் செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.
அதன் பெயரில் டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து.., ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகளுடன் அனுப்பி வைத்தது.., ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்துள்ளார். ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.., இருந்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல்.., தமிழக அரசு அனுப்பிய அனைத்து கோப்புகளையும் தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சில வழிகாட்டுதல்களை தமிழக அரசு பின் பற்ற வில்லை எனவும்.., எனவே தான் அந்த கோப்பைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.., இதனால் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..