‘கர்நாடகாவில் நிகழ்ந்த கோர விபத்து’ தமிழக பக்தர்கள் 10 பேர் பலி!

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் பலியாகியுள்ளனர்.

ஓசூரை அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 தமிழர்கள் தங்கள் காரில் கர்நாடக மாநிலம் தர்மசாலாவில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.அவர்கள் அனைவரும் காரில் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே சாலையோரத்தில் அவர்களது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அந்த காரில் பயணம் செய்த 10 தமிழர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த 2 பேரும் உயிரிழந்தனர். ஒரே இடத்தில் 2 கார்கள் விபத்துக்க்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

‘6 இடங்களுக்கான மாநிலங்களவை எம்பி தேர்தல்’ இன்று முதல் தொடங்குகிறது வேட்புமனுத்தாக்கல்!

‘ஜேம்ஸ் பாண்டையும் பாதித்த கொரோனா’