நடு ரோட்டில் தீப்பிடித்த கார் – குடும்பத்தினர் உயிர் தப்பிய அதிசயம்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த சற்குணம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் கிராமம் அருகே அவர்கள் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் இருந்த சற்குணம் விரைவாக சுதாரித்துக்கொண்டதால் தனது மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமானது.

What do you think?

‘மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கானா ஆணவக்கொலை’ அம்ருதாவின் தந்தை தற்கொலை!

சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்