தேநீர் குடிக்கும்போது இதெல்லாம் சாப்டாதீங்க…!
சிலர் தேநீர் குடிக்கும்போது உடன் சில உணவுகளை சேர்த்து உண்ண விருப்பப்படுவார்கள். அவ்வபோது சில உணவுகளை தேநீருடன் சாப்பிடுவது நம் உடலுக்கு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
அந்த வரிசையில் தேநீருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுப் பொருட்களை இப்போது பார்க்கலாம்.
சாக்லெட் மற்றும் தேநீரில் ஆகிய இரண்டிலும் இருக்கும் காஃபின் என்ற பொருள் ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துகுடி போன்ற சிட்ரஸ் பழங்கள் தேநீரில் இருக்கும் டானிங்களுடன் சேர்த்து கசப்பு சுவையை உண்டாக்கும்.
தேநீருடன் இந்த வகையான காரமான பொருட்களை சாப்பிடும்போது அதில் உள்ள மசாலா ஆகியவை ஒரு விதமான வயிற்று எரிச்சலை உண்டாக்கும். இதனால் தேநீரை சரியாக ருசித்து குடிக்க முடியாது.
எண்ணெயில் பொரித்த உணவுகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அது ஒரு சில உணவுகள் மோசமான சுவையை உண்டாக்கும்.
இதனால் தேநீருடன் சாப்பிடும் உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.