February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா கல்வி

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

காக்னிசெண்ட் நிறுவனம் இந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பணி அமர்த்த முடிவு செய்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக பல துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம், விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசெண்ட்டும் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்தியவில் உள்ள அதன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செலவினங்களை குறைக்கவும், மந்த நிலையை போக்கவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை பணி அமர்த்தப் போவதாக காக்னிசெண்ட் அறிவித்துள்ளது. கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகும் மாணவர்களின் சம்பளத்தை 18 சதவீதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஐ.டி.துறையில் அதிக அளவில் ஊழியர்களை நியமித்த வகையில், 2 லட்சம் பணியாளர்களுடன் காக்னிசெண்ட் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 4 புள்ளி 4 லட்சம் பணியாளர்களுடன் டிசிஎஸ் முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாற்றங்களை கொண்டுவரவே நீதித்துறையில் பழமையான சட்டங்களை நீக்கினோம்…! பிரதமர் நரேந்திர மோடி

superadmin

“ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான், விஜய் விவகாரத்தில் தலையிட மாட்டோம்” – செல்லூர் ராஜூ

Digital Team

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

Digital Team

டெல்லி வன்முறை : காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் – உச்சநீதமன்றம்!

superadmin

தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

superadmin

தீனதயாள் உபாத்யாய சிலையை திறந்து வைத்தார் மோடி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam