தேமுதிகவுக்கு வந்த புது சிக்கல்..!! பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கா..?
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் தேமுதிக மட்டுமா விதிகளை மீறி செயல்படுகிறது..? பாஜக எல்லாம் மற்ற இடங்களில் பேனர் வைக்கவில்லையா, வாக்கு சேகரிக்கும் பெயரில் கூட்டம் நடத்தி பணம் கொடுக்கவில்லையா என கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..