எடப்பாடிக்கு எதிராக வழக்கு..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..?
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீதான 4 ,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் கபில் சிபல் ஆஜரானார்.. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கபில் சிபல் நான் வேண்டுமானால் விலகி கொள்கிறேன் என்றார்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..