தடையை மீறி போராட்டம்; 15,000 இஸ்லாமியர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தடையை மீறி சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, 23 அமைப்பின் நிர்வாகிகள் 39 பேர் உள்ளிட்ட 15,000 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (பிப்-19) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக துணை செயலாளர் துரைசாமி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மக்கள் ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இந்நிலையில் 23 அமைப்புகளைச் சேர்ந்த 39 பேர் மீதும், பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் 15,000 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர போராட்டம் முடிந்து கலைந்து சென்ற போது, அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட, சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

What do you think?

இனி வாக்களர் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்கனும்!

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்