கோவிட் தடுப்பூசி மீதான வழக்கு..!! உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
கொரோனா தடுப்பூசிகள் அபாயத்தை விளைவீப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் கொரொனோ தொற்றானது உலகம் முழுவதும் பரவியது அதில் பல லட்சம் பேர் உயிர் இழந்தனர்.. அதனை கட்டுபடுத்த கோவிட் என தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டது., இந்த தடுப்பூசியை பலரும் போட்டுக்கொண்டனர்.. ஆனால் இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் அதில் அபாயங்கள் இல்லை என ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது..
இதனால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கோவிட் தடுப்பூசியால் எந்தவிதமான பயனும் இல்லை. அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனவே உச்ச நீதிமன்றம் இதனை விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்…
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள்..? இந்த மனுவின் சாராம்சம் ஒன்றுமில்லை. பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், அது எது போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போடப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது” என கூறி , மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..