இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு…!!
ஆந்திர முதல்வர் துணை முதல்வர் குறித்து சர்ச்சை பதிவு இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு…
தெலுங்கு தேசம் கட்சியையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நாரா லோகேஷ், மருமகள் பிராமினி, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை விமர்சிக்கும் வகையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளங்களில் கடந்த வருடம் ஒரு பதிவிட்டிருந்தார். தற்போது அவர் மீது தெலுங்கு தேச கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தன்னுடைய வியூகம் படத்துக்கான பிரமோசனின் போது சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரின் ஆளுமைகளை தெளிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்ட்டின் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் மடிப்பாடு காவல் நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.