அதிமுக முக்கிய பிரமுகர்களிடம் சிபிசிஐடி விசாரணை..!
கரூர் வாங்கல் பகுதியைச் சார்ந்த பிரகாஷ் என்பவர் தனது 22 ஏக்கர் நிலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தனது சொத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக கூறிய வழக்கில் கடந்த மாதம் வாங்கல் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் முன்ஜாமின் இரண்டு முறை தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை பத்திருக்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நிலையில் அவரைத் தேடி வருகின்றனர்.
கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணைத்தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட 3 பேரை அழைத்து வந்து விசாரணை.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நபர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கரூர், திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ டி வி நிர்வாகி பசுபதி செந்தில் உள்ளிட்ட மூன்று பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இன்று காலை ஈரோடு மண்டல ஐ.டி விங் செயலாளரும், எம்.ஆர்விஜயபாஸ்கரின் உறவினர் கவின்ராஜ் வீட்டில் விசாரணை நடத்த சென்றது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்