குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு – சிபிசிஐடி தீவிர விசாரணை

குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஓம்காந்தனின் உதவியாளரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார், ஆயுதப்படை காவலர் சித்தாண்டி, அவரது சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தன் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முறைகேடாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், முறைகேடுகளுக்கு உதவியர்கள் என அனைவரின் பட்டியலையும் சிபிசிஐடி தாயர் செய்துள்ளது.

அந்தவகையில், குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடுகளுக்கு உதவிய டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தனின் நண்பரிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தி வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவரை, சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆசியர் தகுதி தேர்வில் முறைகேடு நடைபெற்றதை ஆதாரத்துடன் நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது

What do you think?

‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ – விஜய் சேதுபதியின் கலக்கல் ட்வீட்

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்! – டொனால்ட் ட்ரம்ப்