February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்; ஆதார் அட்டை உதவியுடன் கைது?

நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய 10 பேரை ஆதார் ஆணையம் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி ஈடுபட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இடைத்தரகர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு பதிலாக தேர்வெழுதிய 2 மாணவிகள் உள்ளிட்ட 10 பேரின் புகைப்படங்களையும் சிபிசிஐடி வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் இருக்கிற 10 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதால், அவர்களின் புகைப்படங்கள் அனைத்து மாநில காவல்துறைக்கும் சிபிசிஐடி அனுப்பி வைத்துள்ளது.

முறைகேடாக தேர்வெழுதியவர்கள் முதுநிலை அல்லது இளநிலை மருத்துவம் படித்தவர்களாக இருக்கக்கூடும் என்பதால், அவர்களின் புகைப்படமும், கைரேகையையும் மற்ற மாநில மருத்துவ கல்வி இயக்குநரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆதார் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் உதவியையும் சிபிசிஐடி நாடியுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது மேலும், முதுநிலை படிப்பு நீட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அது குறித்தும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

Related posts

வைகோவின் கோரிக்கைக்கு சட்ட அமைச்சர் விளக்கம்

Digital Team

தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

Digital Team

அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா…!

superadmin

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தீவிரம் காட்டும் சிபிசிஐடி!

superadmin

சிங்காரச் செல்வன் சீமானின் ‘ஏய் பொண்டாட்டி’ – தம்பிகள் அதிர்ச்சி!

Digital Team

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் !

superadmin
You cannot copy content of this page
Madhimugam