டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – கிராம நிர்வாக அலுவலரிடம் சிபிசிஐடி விசாரணை

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.சி. குரூப்-4, குரூப்-2 ஏ ஆகிய தேர்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், தேர்வில் வெற்றி பெற பலர் பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை மாநகர காவல்துறையினர் பணியாற்றி வந்த காவலர்கள் சித்தாண்டி, பூபதி, விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. நாராயணன் உள்பட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் விளைவாக இந்த முறைகேட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். செஞ்சி அருகே உள்ள அணிலாடி கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், முறைகேடாக தேர்வில் வெற்றிபெற்று, கடந்த 2 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். அவரிடமும் முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

காவலர் தேர்விலும் முறைகேடு?

மோடி-டிரம்ப் சந்திப்பில் புதிய ஒப்பந்தங்கள்?