வெளியான சிசிடிவி காட்சிகள்.. நடிகர் சேரன் மீது பாய்ந்த புகார்..
சேரன்:
நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சேரன். இவர் நடிக்கும் திரைப்படம் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டிருக்கும். அதேவேளையில் சமூகத்தில் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை படத்தில் காட்டி இருப்பார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்குநராக வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி ஆகிய படங்களை இயக்கிய இவர் அதன்பின் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதன்பிறகு பல திரப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகராக வலம் வருகிறார்.
பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதம்:
இந்தநிலையில் இயக்குநர் சேரன் கடலூர் பெரியகங்கணாகுப்பம் பகுதியில், இயக்குனர் சேரன் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரின் பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று வேகமாக இயக்கியதாகவும், காரை முந்தி செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் ஒலித்தபடி வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சேரன் காரை ஓரமாக நிறுத்தி பேருந்து வழிவிட்டபோதும் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் கடுப்பான சேரன் காரில் இறங்கி பேருந்து ஓட்டுநரிடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சேரன் தனது காரை நிறுத்திவிட்டு தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு, இயக்குனர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரினை தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-பவானி கார்த்திக்