Breaking – கடுமையான ஊரடங்கு; மீறுபவர்களுக்கு சிறை!!!

கொரோனா பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஊரடங்கு உத்தரவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

அரசு அறிவுறுத்தலின்படி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மாநில அரசுகள் விதிமுறைகளின்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து மாநில அரசுகளும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபரதம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

What do you think?

சட்டப்பேரவை கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

முக கவசம், சானிட்டைசர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!