‘மத்திய அரசின் முடிவால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்’ பொதுமக்கள் அதிர்ச்சி!

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எரிபொருளுக்கான தேவை குறைந்து கச்சா எண்ணெய்யின் தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒபெக் அமைப்பின் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் வரை சரிவு கண்டது.

இந்த காரணங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே  பெட்ரோல், டீசல் விலையை குறையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்போது பெட்ரோல் ,டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலயில் இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

‘கொரோனாவின் கொடூரம்’ ஸ்பெயினில் 120 பேர் பலி!

‘கார்த்திக்கும் பிரச்சினை கொடுத்த கொரோனா’ தயாரிப்பாளரின் அறிவிப்பு!