‘கொரோனா குறித்த விழிப்புணர்வு’ புதிய யுக்தியை கையிலெடுத்த மத்திய அரசு!

கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,000 தாண்டியுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸால் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.

அந்த குறுஞ்செய்தியில், “பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறும், இருமல் மற்றும் தும்மல் வரும் போது முகத்தினை மூடவும், சோப்பு மூலம் அடிக்கடி கைகளை கழுவவும். மேலும் கண்கள், மூக்கு, வாய் போன்ற பகுதிகளை அவசியமின்றி தொடுவதை தவிர்க்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கு அருகிலிருப்பவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இருந்தால் அவர்களிடமிருந்து விலகியிருக்கும்படியும், கொரோனா குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-23978046 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்”என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

What do you think?

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

‘விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன்’ முன்னணி நடிகரின் அதிரடி அறிவிப்பு!