‘இயற்கை எரிகாற்று எத்தனை வீடுகளுக்குத் தரப்படுகின்றது?’ வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

இந்தியாவில் இயற்கை எரிகாற்று குழாய்கள் வழியாக எத்தனை வீடுகளுக்குத் தரப்படுகின்றது? என்று மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், , “இயற்கை எரிகாற்றுகளின் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின்,அதுகுறித்த தகவல்கள்.இந்தியாவில் எத்தனை நகரங்களில், குழாய்கள் வழியாக வீடுகளுக்குத் தரப்படுகின்றது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இயற்கைச் சூழலைக் கெடுக்காத படிம எரிகாற்றுகள், நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும்பங்கு வகிக்கின்றன எனவும் அவற்றின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் உள்நாட்டில் கூடுதலாகப் பெறுவது, எரிகாற்றுத் தொகுப்புகளை உருவாக்குவது, அயல்நாடுகளில் இருந்து நீர்ம எரிகாற்றுகளை இறக்கும் தளங்களில் இருந்தே, குழாய்கள் வழியாக வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை ஆக்குவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிகளுக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி செலவிடப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. என்றும் 2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறைச்சட்டத்தின்படி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிகாற்று ஒழுங்குமுறை ஆணையம் ,நகரங்களில் பொது வழங்கலுக்கான கட்டமைப்புகளை ஆக்குவதற்கும் நாடு முழுமையும் எரிகாற்றுக் குழாய்களை ஒருங்கிணைப்பதற்குமான பணிகளைச் செய்து வருகின்றது என்றும் அவர் பதிலளித்துள்ளார்,அதுமட்டுமல்லாது இயற்கை எரிகாற்று கிடைக்கின்ற புதிய இடங்களைக் கண்டு அறிந்து, அவற்றை வெளிக்கொணர்வதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.

இதுவரையிலும், 27 மாநிலங்கள், மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதியின் 230 நிலப்பகுதிகளில் உள்ள 400 மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கான வழங்கலுக்காக, 10 முறை ஏலச்சுற்றுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறு்பபினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

What do you think?

‘7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்’ தாமதத்திற்கு யார் காரணம் ?

கொரோனா பலி எண்ணிக்கை 10, 000 தாண்டியது!