‘கொரோனா குறித்து கேள்வி எழுப்பிய வைகோ’ எழுத்து மூலம் பதிலளித்த மத்திய இணை அமைச்சர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த வைகோ கேள்விகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,எழுத்து மூலம் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயளாளருமான வைகோ வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “சார்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய், சீனா மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளைத் தாக்கி உள்ளதா? அவ்வாறு இருப்பின், சீனாவின் அந்தப் பகுதிகளில் எத்தனை இந்தியர்கள் வேலை பார்க்கின்றார்கள்? சுற்றுலாப் பயணியாகச் சென்றவர்கள் எத்தனை பேர்? இந்நோய்த் தாக்குதலை எதிர்க்கொள்ள, போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

அயல்நாடுகளில் இருந்து வருவோர், வான் ஊர்தி நிலையங்களில் முறையாக சோதிக்கப்படுகின்றார்களா? நோய்த்தொற்று இருந்தால், அவர்களைத் தனியாகப் பிரித்து, உரிய வைத்தியம் அளித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, உலக நல்வாழ்வு நிறுவனம், ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதன்படி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதலளித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர்அஷ்வினி குமார் சௌபே , “அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார், சீனாவைத் தாக்கி உள்ள கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் குறித்த கேள்விக்கு அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அந்த நோய், இந்தியாவைத் தாக்கி விடாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹூபேய் மாநிலத்தில், ஊஹான் என்ற நகரத்தில், இந்த நோய்த்தொற்று கண்டு அறியப்பட்டுள்ளது. எனவே, ஹூபேய் மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்கள், அங்கே பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்ற இந்தியர்களை, மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.அதன்படி, 645 பேர் மீட்டு வரப்பட்டனர்.

அவர்கள், இரண்டு இடங்களில் உள்ள தடுப்புகளில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். 243 பேர் மனேசர், 402 பேர் சாவ்லா ஆகிய இடங்களில் உள்ள இந்தியப் படை முகாம் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது கண்டு அறியப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்”.

இவ்வாறாக மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே எழுத்து மூலம், விளக்கமளித்துள்ளார்.

What do you think?

‘நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது’ ரசிகர்கள் அதிர்ச்சி!

‘6 இடங்களுக்கான மாநிலங்களவை எம்பி தேர்தல்’ இன்று முதல் தொடங்குகிறது வேட்புமனுத்தாக்கல்!