ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கட் விலை உயர்வு

கோடை விடுமுறையை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து பிளாட்பார டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது.

இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையையொட்டி எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 15 ரூபாய்க்கு விற்க்கப்படும்.என்றும், மேலும் 3 மாதங்கள் கழித்து ஜூலை மாதம் முதல் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் 10-ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

What do you think?

வேற லெவல் காம்போவுடன் ‘விஜய் 65’ – ரசிகர்கள் கொண்டாட்டம்

கொரோனா வைரஸ்: தென்கொரியாவிலும் கணக்கை தொடங்கியதா!!!