“ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து..” அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!
பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதல் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மூன்று ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், இதுபோன்ற சம்பவத்தில் உண்மை தன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில் யாராக இருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..