6 இடங்களில் செயின் பறிப்பு..!! கொள்ளையரை என்கவுன்டர் செய்த போலீஸ்..!!
நேற்று சென்னை திருவான்மியூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பல்வேறு இடங்களில் 6 வயதானவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாபர், சுராஜ் ஆகிய இரு கொள்ளையர்களை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து செய்தனர்.
அதேபோல் ரயிலில் தப்ப முயன்ற மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான மூவரையும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜாபர் என்ற நபர் மீது சுமார் 50 க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் இவர்கள் இராணிய கொள்ளையர்கள் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ஜாஃபரை நேற்று செயின் பறிப்பில் ஈடுபட்ட தங்க நகைகளை தரமணி ரயில் நிலையம் அருகில் மறைத்து வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து சென்றார்.
அப்பொழுது திடீரென மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் பதிலுக்கு தற்காப்புக்காக ஜாஃபரை என்கவுன்டர் செய்துள்ளனர். இதில் ஜாஃபரின் மார்பில் குண்டு பயந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விருந்துள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடிய ஜாஃபரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜாபர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதை அடுத்து ஜாஃபர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரை நோக்கி ஜாபர் சுட்டி கை துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு மும்பை போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் புகைப்படங்களை வெளியிட்டதில் அதில் ஜாபர் புகைப்படமும் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் இதுபோன்று ஒரு குழுவாக சென்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு அவர்களது சொந்த மாநிலத்திற்கு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றும் சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சென்னையை மீதிக்குள்ளகிவிட்டு விமானம் மூலம் தப்பி செல்ல முயன்ற போது கைதான ஜாபர் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீசார் என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..