திருப்பதியின் புனிதத்தை கெடுக்கும் சந்திரபாபு நாயுடு..!! ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம்..!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பதி பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்புகளால் தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டிருபதாக ஒரு செய்தி வெளியாகி அது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..,
அதனை உறுதி செய்வதற்காக திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த ஆய்வு மையமானது திருப்பதி லட்டுவின் மாதிரி சாம்பிள்களை எடுத்து சென்று பரிசோதனை செய்தது., அந்த பரிசோதனையில் லட்டுவில் மாமிசம் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது..
அந்த ஆய்வின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, “திருமலை ஏழுமலையான் கோவில் மிகவும் புனிதமான திருத்தலம் இந்த திருத்தலத்தில் இப்படி ஒரு அவல செயல் ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்துள்ளது.. இதுகுறித்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், சந்திரபாபு நாயுடு, தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் அளவுக்கு தரம்தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
பொய் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு அறிவுறுத்த வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் எழுந்த சந்தேகம் தீர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..