சந்திராயன் 3 நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு இன்று செல்லுமா..? இஸ்ரோவின் அடுத்த அப்டேட்..!!
சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது 179 கிமீ உயரத்தில் புவி சுற்று பாதையில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் 16 நிமிடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பின் ஜூலை 15ம் தேதி சந்திராயன்-3 விண்கலம் முதல் சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திராயன் 3 திட்டத்தில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக Orbit Raising maneuver எனப்படும் பாதையை உயர்வு எனும் வினை பொருள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் புவியின் சுற்று வட்ட பாதைக்கு மிக அருகில் வரும் பொழுது விண்கலம் உந்து விசையை மேற்கொள்ள செய்து.., அதை புவியின் நீள் வட்ட பாதையில் அதிக தூரம் செல்லும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை 14ம் தேதி : 179 கிமீ உயரத்தில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.
ஜூலை 15ம் தேதி : முதல் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 17 – இரண்டாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 18 – மூன்றாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 20 – நான்காவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
ஜூலை 25 – ஐந்தாவது சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
இதனை தொடர்ந்து இன்று சந்திராயன் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு இன்று இரவு 7 மணியளவில் செல்லும் என் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களில் இதுவரை சந்திராயன் 3 விண்கலம் பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கிமீ தூரம் வரை பயணித்துள்ளது.
இந்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..