அமைச்சர்களின் பதவியேற்பு விழா நிறைவடைந்த பிறகு தமிழக அமைச்சர்களின் இலாக்காக்கள் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இதனை தொடர்ந்து சில அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டு அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில்,அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறையும், அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் அவரின் சுற்றுச்சூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபுவிற்கு கூடுதலாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கபட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.