நாளை மாறியல்.. போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு அறிவிப்பு..!
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சங்கம் இருப்பதை போல, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வரும் பிரச்சனைகளை அணுகுவதற்கு, நல அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, ஓய்வூதியதாரர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, அதனை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்கிறது.
அந்த வகையில், ஓய்வூதியக்காரர்களுக்கு, கடந்த 106 மாதங்களாக, அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை என்று கூறப்படுகுிறது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு காலம் தாழ்த்துகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அகவிலைப்படி உயர்த்தாமல் இருப்பது, மருத்துவ காப்பீடு வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் 9 இடங்களில் மறியல் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 16-ஆம் அன்று, துண்டு பிரசுரம் வழங்கி, பிரச்சார இயக்கத்தை, இந்த அமைப்பு நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்