ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு..! தாய்க்கு நிகரான செவிலியர்கள்..!! வைகோ வாழ்த்து..!!
உலகம் முழுவதும் அன்னையர்தினம் மற்றும் செவிலியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., இன்று உலகின் அனைத்து அன்னையர் மற்றும் செவிலியர்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
அவர்களை தொடர்ந்து உலக செவிலியர் நாள் மற்றும், அன்னையர் தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி என குறிப்பிட்டுள்ளார்.
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு என குறிப்பிட்டுள்ள வைகோ, நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள் என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் முன்னேற அன்னையின் அரவணைப்பே முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ள வைகோ, அப்படிப்பட்ட அன்னையருக்கும், புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துகள் என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..