சவுக்கு சங்கர் – அண்ணாமலை போன் ரெக்கார்ட்..!! அரசுக்கு எதிரான கூட்டு சதி..!
அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி சவுக்கு சங்கர் குழுவை இயக்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காண்டீபன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி குறித்தும் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதுடன் தொடர்பில் உள்ள நான்கு பேரை கைது செய்ய வேண்டும் என்று சங்கர் ஜிவாலிடம் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பேட்டியளித்த காண்டீபன் சவுக்கு சங்கர், பெலிப்ஸ் ஜெரால்ட் மட்டுமில்லாமல் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும். குறிப்பாக சவுக்கு மீடியா எடிட்டர் இன் சிப் முத்து லீப், லியே ஆகேயரை கைது செய்ய வேண்டும்.
தற்பொழுது முத்துலீப், தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் என்பவர் உடன் இணைந்து செயல்படுகிறார். ஆகவே இவர்கள் அரசுக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் மீதும் முதலமைச்சர் அமைச்சர்கள் மீதும் எந்தவித ஆதாரம் இல்லாமல் அவதுறை பரப்பி வந்துள்ளனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது ஒரு தேச விரோத செயல் என்றும் . இவர்கள் தீர விசாரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் யூட்யூபில் நல்ல கருத்துக்கள் வரும் என்று தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..