கள்ளக்காதல் மோகம்.. மனைவியையே இப்படி செய்ய சொன்ன கணவர்..!
சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ஜூலியட்மேரி. இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.
இவர்களின் கள்ளகாதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவந்ததால் ஜூலியட்மேரி அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கணவனுடனான தொடர்பை நிறுத்தும்படி கண்டித்துள்ளார்.
உடனே அந்த பெண் ஜூலியட்மேரி கண்டித்ததை குறித்து கூறியதால் ஆத்திரமடைந்த கணேசன் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு துப்பட்டாவால் ஜூலியட்மேரியின் கைகளை கட்டி அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு அடித்து கணேசன் சித்திரவாதை செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து, காவல்நிலையத்தில் ஜூலியட்மேரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்