உங்க வீட்டில் இன்வெர்டர் இருக்கா..? அப்போ கண்டிப்பாக இதை பாருங்க..!
வீட்டில் மின்சாரம் இருக்கும்போது மின் சக்தியை பேட்டரியில் சேமித்து வீட்டில் மின்சாரம் இல்லாதபோது அதை பயன்படுத்தி மின் சாதனங்கள் இயக்கப்படுகிறது. அப்படி அத்தியாவசியமாக பயன்படும் இன்வெர்டர் பேட்டரியை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இன்வெர்டர் பழுதடைதல்:
இன்வெர்டரில் 45 நாட்களுக்கு தண்ணீர் ஊற்ற மறக்கக் கூடாது. காரணம் தண்ணீர் இல்லையெனில் பேட்டரி சேதமடையும் மேலும் தீ ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டாயம் 45 நாட்களுக்குள் ஒருமுறை தண்ணீரை கட்டாயம் ஊற்ற வேண்டும்.
இன்வெர்டர் தேர்ந்தெடுக்கும் முறை:
வீட்டில் மின்சாரம் இல்லையெனில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய உபகரணங்கள் என்ன என்பதை பார்த்து அவற்றை மட்டும் தனி லைனாக அமைக்க வேண்டும். வீட்டிற்கு பொருத்தமான பேட்டரி அளவை பொருத்து வாங்குவது சிறப்பு.
இன்வெர்டர் பராமரிப்பு வழிமுறைகள்:
நீர்நிலைகளை சரிபார்த்தல்:
பேட்டரியில் நீர் மட்டத்தை சரிபார்த்து இருக்கும் அளவை விட குறைவாக இருந்தால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்க்கலாம்.
அதிர்வெண்:
அதிக வெப்பமான காலங்கள் மற்றும் அதிக பயன்பாட்டின்போது அடிக்கடி பார்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தண்ணீர் சேர்த்தல்:
அசுத்தங்கள் நிறைந்த தண்ணீரை சேர்க்கக் கூடாது. எப்போதும் காய்ச்சி வடிகட்டிய நீரையே ஊற்ற வேண்டும்.
பராமரிப்பு:
அடிக்கடி பேட்டரியை பராமரிக்கும்போது அது நீண்ட நாட்களுக்கு வரும். ஆகவே அடிக்கடி பேட்டரி மற்றும் டெர்மினல்களை பராமரிக்க வேண்டும்.
தேவையான அறிகுறிகள்:
பேட்டரியின் செயல்திறன் குறைவதை கண்டால் அதன் நீர்நிலைகளை சரிப்பார்பது முக்கியம்.
இதுபோல இன்வெர்டர் பேட்டரியை பராமரிப்பதின் மூலம் அது நீண்ட நாட்களுக்கு வருவதையும் நன்றாக செயல்படவும் செய்யும்.