செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை 7-பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்து (62) என்பவரும் தற்போது உயிரிழந்து உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.