இசையால் மயங்கியவர்களை குரலால் மயக்கிய “சின்ன குயில் சித்ரா”
தமிழ் திரை உலகில் பி.சுசிலா எஸ்.ஜானகி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் பாடி கொண்டிருந்த சமையத்தில் கேரள தேசத்தில் இருந்து தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் தான் “சித்ரா“.
தமிழ் திரை உலகில் கால் பதிப்பதற்கு முன் மலையாளத்திலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. அந்த சமையத்தில் தான் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜா, ஆர்.செல்வராஜ் சேர்ந்து இயக்கிய படம் தான் “நீ தானே அந்த குயில்“, இந்த படத்தில் “பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது” என்ற பாடலை கங்கை அமரன் உடன் இணைந்து பாடினார். ஆனால் இத்திரைப்படம் வருவதற்கே முன்னே “பூவே பூச்சூடவா” என்ற படம் வெளியானது.
இந்த படத்தில் இவர் பாடிய “பூவே பூச்சூடவா இளம் நெஞ்சில்” என்ற பலரையும் கவர்ந்தது.., இந்த படத்தை தொடர்ந்து “நீ தானே அந்த குயில்” படமும் வெளியானதும் சித்ரா விற்கு கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாக ஆரமித்தது.
அதே வருடத்தில் இசையை மட்டும் மையமாக வைத்து வெளியான படம் தான் “சிந்து பைரவி” தாயை கண்முன்னே வைத்துக்கொண்டு மகள் படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக பாடப்பட்ட பாடல் தான் “நான் ஒரு சிந்து காவடி சிந்து ” என்ற பாடல் மூலம் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
70s, 80s கிட்ஸ் க்கு மட்டுமா..? 90s கிட்ஸ்க்கும் சித்ராவின் பாடல்களை விரும்பாதவர்கள் யாரவது உண்டா என மனம் விரும்பும் வகையில்.., “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அதிக 90s கிட்ஸ்யையும் கவர்ந்தது.
ஒரு தலை காதல் பாடல் மூலம் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த சித்ரா எஸ்.பி.பி உடன் இணைந்து பாடி அதிக புகழ் பெற்றார்.., இவர்கள் இணைந்து பாடும் பாடலுக்கு நிகர் ஏதும் இல்லை என சொல்லும் வகையில் இருவரின் குரலும் இருக்கும்.
அதில் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் “காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்தது இல்லை” என்ற வரிகளில் “பணக்காரன்” படத்தில் பாடி இருப்பார்கள்.
90s கிட்ஸ் மனதில் அதிகம் கவரப்பட்ட விஜய் நடிப்பில் வெளியான படம் தான் “துள்ளாத மனமும் துள்ளும்” அந்த படத்தில் “இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை” என்ற பாடலை கேட்டு மனம் உருகாத நெஞ்சங்கள் காணமல் இருக்க முடியுமா..,
90s கிட்ஸ்க்கு மட்டுமா 2k கிட்ஸ்க்கும் சித்ரா அவர்களின் பாடல் தான் தாலாட்டு என்று சொல்லும் விதமாக இடம் பெற்ற பாடல் தான் “வாரிசு” படத்தின் “ஆராரிராரிரோ கேட்குதம்மா” என்ற பாடல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அவருக்கு கிடைத்த விருதுகளும் பாராட்டுக்களும் ஏராளம்.., சினிமா பாடல்கள் மட்டுமின்றி அம்மன் பாடல்களையும் பாடியுள்ளார்.
ராஜ ராஜேஸ்வரி படத்தில் வரும் “மருவத்தூர் ஓம் சக்தி” என்ற பாடல் இசைக்காத திருவிழாவே இல்லை, அந்த படத்தில் மட்டுமா, பாளையத்து அம்மன், ராஜகாளி அம்மன், நாகாத்தம்மன், கண்ணாத்தாள், மற்றும் படைவீட்டு அம்மன் என பல அம்மன் படங்களில் பாடி பக்தி பாடல் களையும் கொடுத்துள்ளார்.
இப்படி 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதில் அவர் வாங்கிய விருதுகள் ஏராளம்.., எண்ண முடியாத அளவிற்கு அவருக்கென்று சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.., ரசிகர்கள் அன்போடு அழைக்கும் “சித்ரா அம்மா” என்ற குரல்.., இப்படி பலரின் அன்பையும் குரலால் கவர்ந்த “சித்ரா” அவர்களுக்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..