சென்னையில் உள்ள 17 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் 2011 முதல் 2015 வரை கட்டப்பட்ட ஜெயின் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது. 17 மாடி கட்டிடத்தில், பல்வேறு தளங்களில் கூரைகள் இடிந்து விழுவது தற்போது அன்றாட நிகழ்வாகிவிட்டது. துருப்பிடித்த இரும்பு கம்பிகளுடன் கான்கிரீட் துண்டுகள் தொடர்ந்து கட்டிடத்தில் இடிந்து விழுந்து வருகின்றனர்.
அங்கு இப்பொழுது 1500 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 3 பிரிவுகளுடன் மொத்தம் 640 வீடுகள் கற்றப்பட்டு அதில் 400க்கும் மேலான வீடுகள் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகப்படியான சொகுசை ஏற்படுத்தி தருவதாக ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் செய்த விளம்பரத்தால் அனைவரும் வீடு வாங்கும் கனவில் வாங்கியுள்ளனர்.
ஆனால் வீட்டிற்கு வந்த 6 , 7 வருடங்களிலே வீடு இடியும் சூழலில் இருப்பது அங்கு இருப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுக்குறித்து ஆய்வு செய்தால் கட்டிடத்தின் கட்டுமான தரத்தில் கோளாறு இருப்பதே முக்கியக் காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் மீதமுள்ள வீடுகளை ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.